உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி தாலுகா அலுவலக காம்பவுண்ட் சுவர் சீரமைப்பு பணி

பரமக்குடி தாலுகா அலுவலக காம்பவுண்ட் சுவர் சீரமைப்பு பணி

பரமக்குடி: பரமக்குடி தாலுகா அலுவலக காம்பவுண்ட் சுவர் சாய்ந்த நிலையில், விபத்து குறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியதால் சீரமைப்பு பணிகள் நடக்கிறது.பரமக்குடி, இளையாங்குடி ரோட்டில் தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. இங்கு கருவூலம், வட்ட வழங்கல் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் என அனைத்தும் இயங்குகிறது. மேலும் இ-சேவை மையங்கள், வி.ஏ.ஓ., அலுவலகம், பெண்கள் சிறைச்சாலை என உள்ளே இருக்கிறது.தொடர்ந்து தாசில்தார் குடியிருப்பு வளாகம் பகுதியில் இருந்த காம்பவுண்ட் சுவர் ஒட்டுமொத்தமாக சாய்ந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.இதனை ஒட்டி பஸ் ஸ்டாப் செயல்படுவதால் மக்கள் அச்சத்துடன் இருந்து வந்தனர். இதுகுறித்து ஜன.,4ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகியது. இதன் காரணமாக தாலுகா அலுவலக காம்பவுண்ட் சுவர் முழுமையாக இடிக்கும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ