உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அழகன்குளம் அரசுப்பள்ளியில்  பெற்றோர் ஆசிரியர் கூட்டம் 

அழகன்குளம் அரசுப்பள்ளியில்  பெற்றோர் ஆசிரியர் கூட்டம் 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அழகன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.மாணவர்களின் ஒழுக்க மேம்பாடு, கல்வி வளர்ச்சி, இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் நடந்தது. இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியர் (பொறுப்பு) மகேந்திரன் தலைமை வகித்தார். ஹிந்து சமூக சபை, முஸ்லிம் ஜமாத், முன்னாள் மாணவர் சங்கம், பள்ளி மேலாண்மைக்குழு, பிற அமைப்பினரும் கூட்டத்தில் பங்கேற்றனர். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார். ஒழுக்கம் சார்ந்து கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை உடற்கல்வி ஆசிரியர் இருதயராஜ் விளக்கினார். இன்றை சமூக ஊடகத்தின் பாதிப்பையும், படிப்பில் கவனம் செலுத்தும் முறைகளையும் முதுகலை தமிழாசிரியர் மகேந்திரன் எடுத்துக்கூறினார். சமூகத்தில் தங்களை தற்காத்துக்கொள்ளும் வழி முறைகளையும், சட்ட நுணுக்கங்களுடன் முன்னாள் ஊராட்சித்தலைவர் வழக்கறிஞர் அசோகன் விளக்கினார். ஹிந்து சமூக சபையின் செயலாளர் பரமேஸ்வரன், முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் லுக்மான் ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்