உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மது குடித்தபோது தகராறு பரோட்டா மாஸ்டர் கொலை

மது குடித்தபோது தகராறு பரோட்டா மாஸ்டர் கொலை

ராமநாதபுரம்,:-ராமநாதபுரத்தில் உறவினருடன் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் பரோட்டா மாஸ்டர் மூங்கில் கம்பால் அடித்து கொலை செய்யப்பட்டார். ராமநாதபுரம் சாயக்கார ஊருணி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் 34. இவரது அக்கா ரேவதியின் கணவர் சரவணனின் தம்பி செட்டியகோட்டையை சேர்ந்தவர் கணேசன், 40. இவர் ராமநாதபுரத்தில் உள்ள பிரின்டிங் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவர் சாயக்கார ஊருணி எதிரே அப்பார்ட்மென்ட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவருடன் ரேவதியின் தம்பி ரவிக்குமார் கடந்த 4 மாதங்களாக சேர்ந்து வசித்து வருகிறார். இவர் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக இருந்தார். கணேசனும், ரவிக்குமாரும் நேற்று முன்தினம் இரவு மது குடித்துள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் சண்டையிட்டனர். ரவிக்குமார் செங்கல்லால் கணேசனை தாக்கினார். ஆத்திரமடைந்த கணேசன் அருகில் கிடந்த மூங்கில் கம்பால் தலை உள்ளிட்ட இடங்களில் தாக்கியதில் ரவிக்குமார் அதே இடத்தில் பலியானார். கணேசனை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர். ரவிக்குமாருக்கு பரணி என்ற மனைவியும், ஆகாஷ் என்ற 6 வயது மகனும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை