மேலும் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் 12 போலி டாக்டர்கள்
14-Feb-2025
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், சித்த மருத்துவம், மகப்பேறு பிரிவு, எக்ஸ்ரே உட்பட தனித்தனி பிரிவாக செயல்படுகிறது. முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். முதுகுளத்துார் தாலுகாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்புகின்றனர்.இங்கு உள்நோயாளிகள் பிரிவில் ஆண்கள், பெண்கள்,குழந்தைகள் என தனித்தனியாக படுக்கை வசதி உள்ளது. இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து மக்கள் கூறியதாவது: முதுகுளத்துாரில் தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில் 6 மாதங்களுக்கும் மேலாக டாக்டர் பற்றாக்குறை உள்ளது. காலையில் டாக்டர்கள் குறைவாக இருப்பதால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெறுகின்றனர்.அதே நேரம் இரவு நேரத்தில் ஒரு டாக்டர் கூட பணியில் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இதனால் 25 கி.மீ.,ல் உள்ள பரமக்குடி தனியார் மருத்துவமனைக்கு செல்லும் அவல நிலை உருவாகிறது. இதனால் அசம்பாவிதம் அபாயம் உள்ளது.முதுகுளத்துாரில் அரசு மருத்துவமனை இருந்தும் டாக்டர் பற்றாக்குறையால் நோயாளிகள் சிரமப்படுவது தொடர்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
14-Feb-2025