உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு மருத்துவமனையில் தண்ணீர் இல்லாததால் நோயாளிகள் அவதி 

அரசு மருத்துவமனையில் தண்ணீர் இல்லாததால் நோயாளிகள் அவதி 

திருவாடானை: அரசு மருத்துவமனைக்கு தண்ணீர் சப்ளை இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருவாடானை தாலுகா அலுவலகம் எதிரே அரசு மருத்துவமனை உள்ளது. தினமும் 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். கடந்த 10 நாட்களாக தண்ணீர் சப்ளை இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கழிப்பறைகளில் தண்ணீர் வசதியில்லாததால் உள் நோயாளிகள் சிரமம் அடைந்துள்ளனர். நோயாளிகள் கூறியதாவது:அடிக்கடி தண்ணீர் சப்ளை இல்லாதது பெரும் அவதியாக உள்ளது. கழிப்பறையில் தண்ணீர் இல்லாதததால் வயதான நோயாளிகள் சிரமம் அடைந்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் டேங்கர் லாரியில் சப்ளை செய்யப்படும் நீரும் போதுமானதாக இல்லை என்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தாலுகா தலைமையிடமாக திகழும் இந்த மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை. டாக்டர்கள் மதியம் வரை சிகிச்சை அளித்துவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அவசர சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். மாத்திற்கு ஒரு முறையாவது கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டு நோயாளிகளின் குறைகளை கேட்க வேண்டும். அப்போது தான் நோயாளிகளின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ