உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு; எக்ஸ்ரே பிரிவில் பணியாளர் பற்றாக்குறையால் அவதி

ராமநாதபுரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு; எக்ஸ்ரே பிரிவில் பணியாளர் பற்றாக்குறையால் அவதி

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவு இன்று வரை பழைய கட்டடத்தில் தான் செயல்படுகிறது. எக்ஸ்ரே டிஜிட்டல் இயந்திரங்களுக்கு தேவயைான குளிர் சாதன வசதிகள் முழுமையாக செய்து தரப்படவில்லை. 16 பணியாளர்கள் இருக்க வேண்டிய இப்பிரிவில் 4 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.இதில் 3 பேர் நிரந்தர பணியாளர்கள். ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாவலராக தேர்வு செய்யப்பட்டு தனியார் நிறுவனத்தில் தொழில் நுட்பம் படித்துள்ளதால் எக்ஸ்ரே பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏழு எக்ஸ்ரே இயந்திரங்கள் உள்ளன. இதில் அனலாக் டிஜிட்டல் இல்லாத மேனுவல் இயந்திரங்கள் 10 ஆண்டுகளை கடந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் எக்ஸ்ரே படங்கள் துல்லியமாக தெரிவதில்லை.பிரசவ வார்டில் எக்ஸ்ரே மையம் இல்லாததால் கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள், முதியவர்கள் வேறு வழியின்றி எக்ஸ்ரே எடுப்பதற்காக பழைய கட்டடத்திற்கு அலைந்து திரியும் நிலை உள்ளது.பிரசவ வார்டில் ஒரு எக்ஸ்ரே மையம் அமைக்கப்பட வேண்டும். புதிய கட்டடத்தில் இன்னும் செயல்பாட்டிற்கு வராத நிலையும் உள்ளது. நாள் ஒன்றுக்கு 150க்கும் மேற்பட்டவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது. இதில் ஒவ்வொருவருக்கும் 3 அல்லது நான்கு எக்ஸ்ரேக்கள் எடுக்கும் நிலை உள்ளது.பணியாளர்கள் பற்றாக்குறையால் காலை நேரங்களில்அதிகம் பேர்வருவதால் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. பணியாளர்கள் 24 மணி நேரமும் பணி செய்வதால் வார விடுமுறை கூட எடுக்க முடியாத நிலை உள்ளது.நகரும் எக்ஸ்ரே இயந்திரங்கள் இருப்பதால் அவசர சிகிச்சை, மற்றும் பிரசவ வார்டுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும்.குளிர்சாதன வசதி செய்து பழைய அனலாக் இயந்திரங்களை தவிர்த்து புதிய தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே எடுப்பதற்கு அரசிடம் பரிந்துரை செய்து பெற வேண்டும். நோயாளிகளிடம் எக்ஸ்ரே எடுப்பதற்கு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது. அதற்கான ரசீதும் வழங்கப்படுவதில்லை. இதனால் நோயாளிகளை எக்ஸ்ரே பிரிவில் தவிக்க விடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ