மேலும் செய்திகள்
அஞ்சுகோட்டை கண்மாயில் மான், மயில்கள் அதிகரிப்பு
21-Aug-2024
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேடி கூட்டமாக மயில்கள் உலா வருகின்றனர்.முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராம கண்மாய்கள், சீமைக்கருவேலம் காடுகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. கடந்த ஆண்டு பெய்த பருவமழை நேரத்தில் கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் தேங்கியது. தற்போது ஏராளமான கண்மாய்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கண்மாய் பகுதியில் வசித்த பறவை இனங்கள் தண்ணீருக்கு தவிக்கின்றன. முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட சித்திரங்குடி, கொண்டுலாவி, கிடாத்திருக்கை உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருப்புகளில் தண்ணீரை தேடி கூட்டமாக மயில்கள் உலா வருகின்றன. அப்போது ரோட்டில் உலா வருவதால் வாகனங்கள் மோதி மயில்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.ஒருசில நேரங்களில் நாயிடம் சிக்கி காயம் அடையும் நிலை உள்ளது. எனவே மயில்களை பாதுகாக்க கண்மாயில் தண்ணீர் தேக்கி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
21-Aug-2024