உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதமடைந்துள்ள மின்கம்பம் விபத்து அச்சத்தில் மக்கள்

சேதமடைந்துள்ள மின்கம்பம் விபத்து அச்சத்தில் மக்கள்

கமுதி: -கமுதி அருகே சிங்கப்புலியாபட்டி கிராமத்தில் குடியிருப்பு அருகே சேதமடைந்துள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சப்படுகின்றனர்.கமுதி அருகே சிங்கப்புலியாபட்டி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கமுதி துணைமின் நிலையத்திலிருந்து பலஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள கம்பம் வழியாக மின் வினியோகம் செய்யப்படுகிறது.இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி முழுவதும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இவ்வழியே நடந்து செல்வதற்கு பொதுமக்களும் அச்சப்படுகின்றனர். காற்று அடித்தால் சாய்ந்துவிழ வாய்ப்புள்ளது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. விபத்திற்கு முன்பாக ரோட்டின் நடுவில் உள்ள சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ