மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
9 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
9 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
9 hour(s) ago
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் அருகே புதிய சட்டக் கல்லுாரி கட்டடத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி திறப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சியினர் தெரிவித்தனர்.இதுகுறித்து முதல்வருக்கு ஹிந்து மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பிரபாகரன் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:ராமநாதபுரத்தில் 2017ல் துவக்கப்பட்ட அரசு சட்டக் கல்லுாரி பெருங்குளம் அரசு பள்ளியில் செயல்படுகிறது. இங்கு 180 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லாத நிலையில் ராமநாதபுரம் குதக்கோட்டை அருகில் சட்டக் கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி 99 சதவீதம் முடிந்து விட்டது. ஆனால் இக்கட்டடத்தை 2024--25 கல்வி ஆண்டில் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் அரசு மவுனமாக உள்ளது. இச்சூழலில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை புதிய கட்டடத்தை இக்கல்வி ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டது. தற்போது நெல்லை, துாத்துக்குடி, மதுரை, விருதுநகரில் இருந்து ஏராளமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.தற்போதைய சட்டக் கல்லுாரி நுழைவு வாயில் அருகில் அரசு மதுபான கடை உள்ளதால் அப்பகுதியில் குடிமகன்கள் ரகளை செய்கின்றனர்.இதனால் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி குதக்கோட்டையில் அமைந்துள்ள புதிய கல்லுாரி கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago