உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் ரோட்டில் மண் குவியல்

ராமேஸ்வரம் ரோட்டில் மண் குவியல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகர் ரோட்டோரத்தில் மண் அகற்றப்படாமல் குவிந்துள்ளதால் காற்றில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம், திருப்புல்லாணி, ஏர்வாடி, தேவிப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாகவாகன போக்குவரத்து அதிகமாக உள்ள ராமநாதபுரம் - ராமேஸ்வரம், ராமநாதபுரம் ரோட்டோரத்தில் மண் குவிந்து கிடக்கிறது. பலத்த காற்று வீசும் போது மண் துாசி பறந்து புழுதி கிளம்புவதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து அபாயம் உள்ளது. எனவே ரோட்டோரம் குவிந்துள்ள மண்ணை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்