உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தலையாரி தீவில் மண்ணரிப்பை தடுக்க 5000 பனை விதைகள் நடவு

தலையாரி தீவில் மண்ணரிப்பை தடுக்க 5000 பனை விதைகள் நடவு

கீழக்கரை: -மன்னார் வளைகுடா வனச்சரகத்தில் 21 தீவுகள் உள்ளன.மண்டபம் வனச்சரகத்தில் 7 தீவுகளும், கீழக்கரை வனச்சரகத்திற்கு 7 தீவுகளும், சாயல்குடி மற்றும் துாத்துக்குடி வனச்சரகத்தில் 7 தீவுகளும் உள்ளன. இவற்றில் தலையாரி தீவு இரண்டு சதுர கி.மீ., உள்ளது. இப்பகுதியில் செப்., மற்றும் அக்., மாதங்களில் ஐந்தாயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. கடந்த நவ., டிச., ஜன., மாதங்களில் பெய்த பருவ மழையால் பனை விதைகள் முளைத்து வருகின்றன.இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து ஆயிரக்கணக்கான பனை மரங்கள் தீவை சுற்றிலும் செழித்து வளரும்.தீவுகளில் வளரக்கூடிய பனை மரத்தால் மண்ணரிப்பு வெகுவாக தடுக்கப்படும். மணல் துாறல் குறையும். தீவுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பனை மரங்கள் கொண்டுள்ளது. இந்நிலையில் தலையாரி தீவுக்கு அருகே வரக்கூடிய நாட்டுப் படகு மீனவர்கள் ஒரு சிலர் நன்கு வளர்ந்துள்ள பனை மரங்களை தோண்டி எடுத்து அவற்றின் கிழங்குகளை சாப்பிடுவதற்காக அழிக்கின்றனர்.ஐந்தாயிரம் எண்ணிக்கையிலான பனங்கொட்டைகளை சேகரித்து அவற்றினை படகுமூலம் தீவிற்கு கொண்டு சென்று பராமரிப்பில் வளர்க்கப்படுகிறது. எனவே மீனவர்களும் பனைமரங்கள் வளர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வனத்துறையினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை