உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போலீசார் பாகுபாடின்றி செயல்பட வேண்டும்: டி.ஐ.ஜி., துரை பேச்சு

போலீசார் பாகுபாடின்றி செயல்பட வேண்டும்: டி.ஐ.ஜி., துரை பேச்சு

திருவாடானை : போலீசார் எந்த கட்சிக்கும் பாகுபாடில்லாமல் பணியாற்ற வேண்டும் என டி.ஐ.ஜி., துரை அறிவுறுத்தினார்.திருவாடானை சப்-டிவிஷனில் உள்ள திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசாருக்கு லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் தொண்டியில் நடந்தது. ராமநாதபுரம் டி.ஐ.ஜி., துரை பங்கேற்று பேசியதாவது:போலீசார் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற வேண்டும். எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படக் கூடாது. தேர்தல் அதிகாரிகள் இடும் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும். அனைத்து கட்சியினரையும் விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள், விதிமுறை மீறல்களை வீடியோ பதிவு செய்ய வேண்டும். தேர்தல் அலுவலர்களுடன் இணக்கமாக பணியாற்ற வேண்டும். ரவுடிகளிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஓட்டுச்சாவடி எல்லையை நடைமுறைப்படுத்தி விதிமீறல் இல்லாமல் கண்காணிக்க வேண்டும். பூத் ஏஜென்ட்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்றார். டி.எஸ்.பி., நிரேஷ், இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை