உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தில் காயமடைந்த போலீஸ் எஸ்.ஐ., பலி 

விபத்தில் காயமடைந்த போலீஸ் எஸ்.ஐ., பலி 

ராமநாதபுரம்,:-ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., டூ-வீலர் விபத்தில் பலியானார். தேவிபட்டினத்தில் எஸ்.ஐ., யாக பணிபுரிந்தவர் தென்கரை மகாராஜா, 56. இவர், ஜூன், 29 இரவு பணி முடித்து உறவினர் முருகேசன் டூ--வீலரில் ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு வந்தார்.சிதம்பரம்பிள்ளை ஊருணி அருகே எதிரில் டூ-வீலருடன் மோதியதில் துாக்கி வீசப்பட்ட தென்கரை மகாராஜா, முருகேசன் இருவரும் பலத்த காயமடைந்தனர். மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தென்கரை மகாராஜா நேற்று இறந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்