உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காலாவதியான காப்பீடு பாலிசி புதுப்பிக்க அஞ்சல் துறை சலுகை

காலாவதியான காப்பீடு பாலிசி புதுப்பிக்க அஞ்சல் துறை சலுகை

ராமநாதபுரம்: அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு திட்டத்தில் காலாவதியான காப்பீடுகளை புதுப்பிக்க அபராதத் தொகையை 30 சதவீதம் வரை விலக்களித்து சலுகை வழங்கப்பட்டுள்ளது.இந்திய அஞ்சல்துறை சார்பில் குறைந்த தவணை, அதிக பிரிமியத்துடன் ஆயுள் காப்பீடு பாலிசி, கிராமிய ஆயுள் காப்பீடு பாலிசி சேவைகள் வழங்கப்படுகிறது. காலாவதியான பாலிசிகளை அபராதத் தொகையுடன் புதுப்பிக்கலாம்.அஞ்சல் ஆயுள் காப்பீடு இயக்குநரகம் மார்ச் 1 முதல் 31 வரை காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்கள் அபராதத் தொகையில் 25 முதல் 30 சதவீதம் வரை, அதாவது ரூ.2500 முதல் 3500 வரை விலக்கு அளிக்கும் வகையில் சலுகையை அறிவித்துள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி காலாவதியான பாலிசிகளை புதுப்பித்து வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம் என ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை