உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாகம்பிரியாள் கோயிலில் கோழிகள் ஏலம்

பாகம்பிரியாள் கோயிலில் கோழிகள் ஏலம்

திருவாடானை, : திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் கோழிகள் ஏலம் நடந்தது.திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கும் முடி, கோழி மற்றும் சேவல் பொது ஏலம் ஆண்டு தோறும் நடைபெறும்.நேற்று ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார் தலைமையில் ஏலம் நடந்தது. இதில் கோழி, சேவல் ரூ.26 லட்சத்து 4 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது. முடி ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் நிறுத்தி வைக்கப்பட்டது.தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி