உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதல்வரின் விபத்து காப்பீட்டு திட்ட செயல் அலுவலகம் தேவை

முதல்வரின் விபத்து காப்பீட்டு திட்ட செயல் அலுவலகம் தேவை

கீழக்கரை, : தமிழக முதல்வரின் விபத்து காப்பீடு திட்டத்திற்காக வேலை நேரங்களில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் நிலை தொடர்கிறது.கீழக்கரை நகராட்சியில் 1 முதல் 21 வார்டுகள் உள்ளன. இங்கு 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். கீழக்கரை, காஞ்சிரங்குடி, திருப்புல்லாணி உள்ளிட்ட 26 வருவாய் கிராமங்கள் சேர்ந்த பொதுமக்கள் இத்திட்டத்தில் பயனடைவதற்காக கலெக்டர் அலுவலகம் செல்கின்றனர். கீழக்கரை அலைன்ஸ் மக்கள் நல்லிணக்க தலைவர் ஹபீப் முகம்மது கூறியதாவது:கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் முதல்வரின் விபத்து காப்பீடு திட்டத்திற்கான செயல் அலுவலகம் தேவையாக உள்ளது. 17 முதல் 25 கி.மீ., சுற்றளவு உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்வதால் கால விரயம் ஏற்படுகிறது.எனவே கீழக்கரை நகராட்சி அலுவலகம் அருகே முதல்வரின் விபத்து காப்பீட்டு திட்டத்திற்கான செயல் அலுவலகம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி