உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொள்முதல்  விலையை குறைத்த தனியார் பால் நிறுவனங்கள்

கொள்முதல்  விலையை குறைத்த தனியார் பால் நிறுவனங்கள்

ராமநாதபுரம்:தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைத்துள்ளதால் 20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:தமிழகத்தில் தினமும் 2 கோடியே 10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஆவின் நிறுவனம் 33 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. உற்பத்தியில் இது 15 சதவீதம் மட்டுமே. மீதம் 85 சதவீதத்தை 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தான் கொள்முதல் செய்கின்றன.விற்பனை குறைந்திருப்பதாக காரணம் காட்டி பால் லிட்டருக்கு ரூ.5 குறைத்து ரூ.35 க்கு கொள்முதல் செய்கின்றனர். பால்வளத்துறை அமைச்சர் 15 சதவீதம் கொள்முதல் செய்யும் ஆவின் நிறுவனத்திற்கு மட்டுமே அமைச்சராக உள்ளார். பால் வளத்துறையும் இவர் கீழ் தான் செயல்பட்டு வருகிறது.தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை குறைத்திருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தனியார் நிறுவனங்களை அழைத்து கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க அறிவுறுத்த வேண்டும். இல்லை என்றால் அந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட கூடாது என அறிவிக்க வேண்டும். எனவே முதல்வரும், பால் வளத்துறை அமைச்சர், அதிகாரிகள் உடனடியாக இந்த பிரச்னையில் தலையிட்டு பால் உற்பதியாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தலைமை செயலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி