உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சொத்து தகராறில் மருமகளை கொன்ற மாமனாருக்கு காப்பு

சொத்து தகராறில் மருமகளை கொன்ற மாமனாருக்கு காப்பு

முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே முத்துவிஜயபுரத்தை சேர்ந்த ஜேசு மகன் ஆரோக்கிய பிரபாகரன், 36. இவரும், தட்டான்குடியிருப்பு உமா, 32, என்பவரும் 10 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். கடந்த ஆண்டு மஞ்சள் காமாலையால் ஆரோக்கிய பிரபாகர், இரண்டாவது குழந்தை ஜெமி தெரசா, 7, உயிரிழந்தனர்.பின், முத்துவிஜயபுரத்தில் உள்ள வீட்டில் உமா, முதல் குழந்தை மரியஜெலினா, 11, வசித்தனர். ஆரோக்கிய பிரபாகர் தந்தை ஜேசு, 70, சொத்து பிரச்னையில் உமாவிடம் தகராறில் ஈடுபட்டார். மே 20ல் தன்னை கொல்ல முயற்சிப்பதாக தந்தை ஜெயராஜுக்கு உமா தகவல் தெரிவித்தார். அவர் முத்துவிஜயபுரம் வந்த போது, உமா தீயில் கருகிய நிலையில் இருந்தார்.ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உமா நேற்று இறந்தார். கீழத்துாவல் போலீசார் விசாரணையில், ஜேசு சொத்து பிரச்னையில், உமாவை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றது தெரிந்தது. ஜேசுவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ