உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நெடுஞ்சாலையில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு: மக்கள் முற்றுகை போராட்டம்

நெடுஞ்சாலையில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு: மக்கள் முற்றுகை போராட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ராம்நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மதுபானக்கடை திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராம்நகர் கிழக்கு கடற்கரை சாலை - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் அருகே ஏற்கனவே 3 மதுபான கடைகள் உள்ள நிலையில் புதிதாக தனியார் மதுபானக்கடை பார் உடன் நேற்று முன்தினம் திறந்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று கடையை திறக்கவிடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பகுதியை சேர்ந்த சீதா லட்சுமி கூறுகையில், மதுவிற்கு அடிமையாகி எனது கணவர் இறந்து விட்டார். என்னை போல பல பெண்கள் தாலி இழந்துள்ளனர். ஏற்கனவே ராம்நகர், விவேகானந்தா நகர் சுற்றியுள்ள 3 மதுக்கடையால் மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் புதிதாக கிளப் பெயரில் மதுபான கடை திறக்க கூடாது. அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்றார்.அப்போது அங்குவந்த தாசில்தார் சாமிநாதன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தனி தாசில்தார் முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுபான கடை தற்போது திறக்கப்படாது எனக் கூறினர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி