உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாட்டுப்படகுகள் தரம் ஆய்வு

நாட்டுப்படகுகள் தரம் ஆய்வு

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் (வடக்கு) ஆற்றங்கரையிலிருந்து எஸ்.பி.பட்டினம் வரை 2190 நாட்டுப்படகுகளும், 84 விசைப்படகுகளும் உள்ளன. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி முதல் கட்டமாக மே 31ல் விசைப்படகுகள் ஆய்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று நாட்டுப்படகுகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது படகுகளின் தரம், உறுதி, தயாரிக்கப்பட்ட தேதி, கடலுக்குள் சென்று ஆபத்தில்லாமல் மீன்பிடிக்க தகுதியானதா என சரிபார்க்கப்பட்டது. படகு உரிமையாளர்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம் போன்ற பல ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருந்து ஆய்வுக்குழுவிற்கு விபரங்களை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை