உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி ஆப் கோல்டன் சங்க புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா ஆர்.எஸ்.மங்கலத்தில் ரோட்டரி முன்னாள் கவர்னர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தலைமையில் நடந்தது. வருங்கால கவர்னர்கள் தினேஷ் பாபு, காந்தி, பட்டய தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி முன்னிலை வகித்தனர். முன்னாள் செயலாளர் கருணாகரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.புதிய தலைவராக ஜார்ஜ் பதவியேற்றார். செயலாளராக பைராம் கான், பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் பொறுப்பேற்றனர். புதிய உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு துணை கவர்னர் செல்வராஜ், முன்னாள் துணை கவர்னர் ஜெகதீஸ் சந்திரபோஸ், ஆகியோர் ரோட்டரி சங்க செயல்பாடுகள் குறித்தும், விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.முன்னாள் தலைவர்கள் சுப்பிரமணி, கந்தசாமி, ஜோதி, பத்மநாபன், ரொட்டேரியன் சுகுமார், கல்பனா, தியாகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை