உள்ளூர் செய்திகள்

ராகுகால பூஜை

சாயல்குடி : சாயல்குடி அருகே மலட்டாறு சந்திப்பில் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வக ஆசிரமத்தில் ஞாயிறு ராகுகால பூஜை நடந்தது. முன்னதாக மைய நிறுவனர் அழகுதுரை சிங்கம், மாரியூர் பூவேந்திர நாதர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்தார். அங்குள்ள தல விருட்சம் வில்வாகை மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தார். தொடர்ந்து ஆசிரமம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் கலைமுருகன், ராமையா, ஈஸ்வரபாண்டி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை