உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் போராட்டம்

ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் போராட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மத்திய அரசின் சட்ட திருத்தங்களை கண்டித்து நீதிமன்றங்களை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய அதினியம் ஆகிய மூன்று சட்டதிருத்தங்களை செய்துள்ளது. இதனை கண்டித்து வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு வழக்கறிஞர் சங்கத்தலைவர் ேஷக் இப்ராஹிம், செயலாளர் கருணாகரன், பொருளாளர் பாபு, துணைத்தலைவர் மாதவன், மூத்த வழக்கறிஞர்கள் பாலகிருஷ்ணன், சுல்தான், குணசேகரன், ரவிச்சந்திர ராமவன்னி, கிருபாகரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.மத்திய அரசின் சட்டத்திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஜூலை 5 ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.* முதுகுளத்துாரில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். செயலாளர் சிவராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். புதிய சட்ட திருத்தத்தை கண்டித்து ஜூலை 8 வரை நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய உள்ளதாக கூறினர். வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை