உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கர்ப்பிணி கொலையில்  துப்பு துலக்க முடியாமல் ராமநாதபுரம் போலீசார் திணறல்

கர்ப்பிணி கொலையில்  துப்பு துலக்க முடியாமல் ராமநாதபுரம் போலீசார் திணறல்

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் களத்தாவூர் கண்மாய் பகுதியில் 30 வயது மதிக்கதக்ககர்ப்பிணி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவ்வழக்கில்துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.ராமநாதபுரம் அருகே களத்தாவூர் கண்மாய் பகுதியில் மே 1ல் 9 மாத கர்ப்பிணியின்உடல் மிதந்தது. பஜார் போலீசார் வழக்குபதிவு செய்தனர். விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. கர்ப்பிணி கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வாகனத்தில் கொண்டு கண்மாயில் வீசியுள்ளனர். இவர் வடமாநிலப்பெண் போல்காணப்படுகிறார். இவரது உடலில் நகைகள் அப்படியே இருந்தன. இவரது கைரேகையை வைத்து ஆதார் விபரம் அறியலாம் என்றால் நீதிமன்றம் தனிப்பட்ட நபர்களின் கைரேகைகளை வைத்து அடையாளம் காண தடை விதித்துள்ளது. அந்தப்பகுதியில் கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்தபோது உடல் வீசப்பட்ட நேரத்தில்400 வாகனங்கள் சென்றுள்ளது பதிவாகியுள்ளது. வாகனத்தை துல்லியமாக கண்டறிய முடியவில்லை. கர்ப்பிணி கையில் ஓட்டுப்போட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை. வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணாக இருக்கலாம் என்றும். பெண்ணை வேறு இடத்தில் கொலை செய்து இங்கு வந்து உடலை போட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சேகரித்ததகவல்களை வைத்து துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி