உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தடைக்காலம் முடிந்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க ஆயத்தம்

தடைக்காலம் முடிந்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க ஆயத்தம்

ராமேஸ்வரம்:-மீன் பிடி தடைக்காலம் முடிந்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல ஆயத்தமாகினர்.மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் மீனவர்கள் விசைப்படகில் இன்ஜின் பழுதை நீக்கி சேதமடைந்த மரப்பலகைகளை அகற்றி புதுப்பித்தனர்.இன்று அதிகாலை 12:00 மணியுடன் தடை காலம் முடிந்தது. ஆனால் நேற்று காலை முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்களை பதப்படுத்த ஒரு படகில் 20 முதல் 30 ஐஸ் பார்களை ஏற்றினர். மேலும் படகுகளில் எரிபொருள் நிரப்பி, உணவுப் பொருள்கள், சமைக்க ஸ்டவ்களை ஏற்றினர்.படகில் 100 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல ஆயத்தமாகி உள்ளனர். 59 நாட்களுக்கு பிறகு நேற்று ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் மீனவர்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இருந்தது.மீன்பிடிக்க இன்று காலை 6:00 மணிக்கு மீன்துறை அனுமதி டோக்கன் வழங்க இருந்தனர். ஆனால் டோக்கன் வாங்காமல் மீன்துறை அனுமதியின்றி தடைக்காலம் முடிவதற்குள் நேற்று மதியம் 3:00 மணிக்கு மேல் 90 சதவீதம் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை