உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 7 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்

7 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் ஏழு நாட்களுக்குப் பின் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று நேற்று மீன்பிடிக்கச் சென்றனர்.ராமேஸ்வரத்தில், மீனவர்கள் வலையில் சிக்கிய இறால், நண்டு, கணவாய், காரல் உள்ளிட்ட பலவகை மீன்களுக்கு வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை குறைத்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து உரிய விலை கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கக் கோரி ஜூலை 6 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இந்நிலையில் மீனுக்கு உரிய விலை வழங்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்ததால் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று நேற்று, 400 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். ஏழு நாட்களுக்கு பின் மீன்பிடிக்கச் செல்வதால் அதிக மீன்வரத்து கிடைக்கும் நம்பிக்கை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை