உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி அருகே புதர்மண்டி கிடந்தசெடி, கொடிகள் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

பள்ளி அருகே புதர்மண்டி கிடந்தசெடி, கொடிகள் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் தினமலர் நகரில் உள்ள அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி அருகே ரோட்டோரத்தில் புதர்மண்டி வளர்ந்திருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டது.ராமநாதபுரம் தினமலர் நகரில் அரசு உதவிபெறும் தொடக்கபள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதனைச்சுற்றியும், ரோட்டோரத்தில் ஏராளமான புற்கள், செடிகள் வளர்ந்துள்ளன.இப்பகுதியில் தேள், பூரான், பாம்பு போன்ற விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் உத்தரவில், நகர்நல அலுவலர் ரத்தினகுமார், சுகாதாரஆய்வாளர் சரவணக்குமார் மேற்பார்வையில் பள்ளி காம்பவுண்ட் சுவர் அருகே வளர்ந்திருந்த செடி,கொடிகள் அகற்றும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ