உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரூ.1.33 கோடியில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் ரோடு சீரமைப்பு

ரூ.1.33 கோடியில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் ரோடு சீரமைப்பு

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் நகராட்சி பஸ்ஸ்டாண்ட் சிமென்ட் ரோடு ரூ.1.33 கோடியில் புதுப்பிக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது.ராமேஸ்வரம் நகராட்சி பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சிமென்ட் ரோடு அமைத்த நிலையில் தற்போது ஆங்காங்கே ரோடு பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் ரோட்டை புதுப்பிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.33 கோடியில் பஸ் ஸ்டாண்டில் சிமென்ட் ரோடு அமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது.

ரோட்டின் மீது ரோடு

பழைய ரோட்டை பெயர்த்து எடுத்த பின் புதிய ரோடு அமைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பழைய ரோட்டை பெயர்த்து எடுக்காமல் அதன் மீது புதிய ரோடு அமைப்பதால் உறுதித் தன்மை மோசமாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.முறையாக ஆய்வு செய்த பின் சாலை மீது புதிய சாலை அமைக்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பு இருக்காது. உறுதித் தன்மை மேலும் அதிகரிக்கும் என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ