உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மனநலம் பாதித்த நோயாளிகள் காப்பகத்தில் சேர்க்க கோரிக்கை

மனநலம் பாதித்த நோயாளிகள் காப்பகத்தில் சேர்க்க கோரிக்கை

திருவாடானை, தொண்டியில் பஸ்ஸ்டாண்ட், கோயில்கள், சாலை ஓரங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சுற்றி திரிகின்றனர். இவர்களை அரசு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானை, பஸ் ஸ்டாண்டில் அரைகுறை ஆடையுடன் நிற்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் மக்கள் அச்சமடைகின்றனர். இவர்களில் பெரும்பாலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். கிராமங்களில் உள்ள நிழற்குடைகளில் மனநோயாளிகள் தங்கி சிரமப்படுகின்றனர். தெருக்களில் செல்லும் இவர்களை சிலர் தாக்குவதும், துரத்தும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே மனநலம் பாதிக்கப்பட்டு ரோட்டில் திரியும் நோயாளிகளை காப்பகங்களில் சேர்த்து உணவளித்து, முறையான மருத்துவ சிகிச்சை கொடுத்து மறுவாழ்வு அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை