உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டோரங்களில் பனை மரங்கள் வளர்க்க கோரிக்கை  

ரோட்டோரங்களில் பனை மரங்கள் வளர்க்க கோரிக்கை  

திருவாடானை: திருவாடானை அருகே மங்களக்குடி-தேவகோட்டை ரோட்டில் பனை மரங்கள் வளர்க்க வலியுறுத்தப்பட்டது.திருவாடானை அருகே மங்களக்குடி- தேவகோட்டை ரோட்டில் 500க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பெரிய அளவில் வளர்ந்து இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு ரோடு விரிவாக்கப் பணியின் போது இவை வெட்டி அகற்றப்பட்டன. பனை மரங்களை அகற்றிய இடத்தில் மீண்டும் பனை மரம் வளர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ரோட்டோர பனை மரங்கள் ஊருக்கு அடையாளமாகவும், பெருமை சேர்ப்பதாகவும், மண் அரிப்பு ஏற்படாமல் ரோட்டிற்கு பாதுகாப்பாகவும் இருந்தன. மரத்தை அகற்றாமல் மாற்று வழியில் சாலை அமைத்திருக்கலாம். அதற்கு முயற்சி எடுக்கவில்லை. இதனால் 100க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. பனை மரத்தை வெட்டுவது எளிது. ஆனால் உருவாக்குவது மிக கடினம் என்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை