உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காஞ்சிரங்குடியில் அங்கன்வாடி ரேஷன் கடை திறக்க கோரிக்கை

காஞ்சிரங்குடியில் அங்கன்வாடி ரேஷன் கடை திறக்க கோரிக்கை

கீழக்கரை : கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சியில் 8 மாதங்களுக்கு முன்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் மையம் கட்டடம் மற்றும் ரேஷன் கடைகளுக்கான கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.காஞ்சிரங்குடி ஊராட்சியில் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.சேதமடைந்த கட்டடத்தில் அங்கன்வாடி கட்டடம் இயங்கியதால் அதனை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டடம் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.தற்போது சேதமடைந்த மற்றொரு கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைக்கான கட்டடம் சேதமடைந்ததால் அதனையும் இடித்து விட்டு புதிய கட்டடம் ரூ.20 லட்சத்தில் அமைத்துள்ளனர்.காஞ்சிரங்குடியை சேர்ந்த ஜமாஅத் உறுப்பினர் அப்துல் பாசித் கூறியதாவது: காஞ்சிரங்குடியில் சமீபத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் ரேஷன் கடை கட்டடம் புதிதாக கட்டப்பட்டவைகளை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி கோரிக்கை மனு அளித்துள்ளோம்.கடந்த 8 மாதங்களாகாமல் புதிய கட்டடம் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை