உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழையால் மீண்டும் முளைத்த நெற்பயிர்: விவசாயிகள் கவலை

மழையால் மீண்டும் முளைத்த நெற்பயிர்: விவசாயிகள் கவலை

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல் கிராமத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள்மழையால் மீண்டும் முளைத்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 100 ஏக்கருக்கும் அதிகமாக நெல் விவசாயம் செய்துள்ளனர். பருவமழை பொய்த்த நிலையில்போர்வெல், டிராக்டர் தண்ணீரை பாய்ச்சி பாதுகாத்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு முதுகுளத்துார் வட்டாரத்தில் பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி மீண்டும் முளைக்கத் துவங்கியது. விவசாயி சவுந்தரவள்ளி கூறியதாவது:அப்பனேந்தல் கிராமத்தில் 100 ஏக்கருக்கு அதிகமாக நெல் விவசாயம் செய்துள்ளோம். மழையின்றி கூடுதல் பணம் செலவு செய்து தண்ணீர்பாய்ச்சி வந்தோம். கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழையால் தண்ணீரில் மூழ்கி வீணாகியது. தற்போது நெற்பயிர் மீண்டும் முளைக்கத் துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ