மேலும் செய்திகள்
துாண்கள் சேதமடைந்த நிலையில் உள்ள பாலம்
23-Feb-2025
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சாம்பக்குளம் -அபிராமம் செல்லும் ரோட்டில் கண்மாய் தண்ணீரை ஆபத்தான முறையில் விவசாய நிலத்திற்கு பாய்ச்சுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.முதுகுளத்துார் அருகே சாம்பக்குளம், உடைகுளம் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிளகாய், பருத்தி விவசாயம் செய்கின்றனர். தற்போது கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் வைத்து பாய்ச்சுகின்றனர்.இந்நிலையில் சாம்பகுளத்தில் இருந்து அபிராமம் செல்லும் ரோட்டில் குழாய் அமைத்து தண்ணீர் பாய்ச்சி வந்தனர். இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். கடந்த இரண்டு நாட்களாக திறந்தவெளியில் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.இதனால் இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவு நேரத்தில் தண்ணீர் செல்வது தெரியாமல் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முறையாக கண்மாயில் இருந்து வரத்து கால்வாய் வழியாக விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
23-Feb-2025