ரேஷனில் பொருள் வழங்காததால் சாயல்குடியில் சாலை மறியல்
சாயல்குடி: ரேஷனில் முறையாக பொருட்கள் விநியோகம் செய்யப்படாததால் சாயல்குடியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட வி.வி.ஆர்., நகரில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு ரேஷன் கடையில் முறையாக பொருள்கள் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி நேற்று துாத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சாயல்குடி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் கலந்து சென்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக ரேஷன் கார்டுகளுக்கு முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மறியல் காரணமாக 15 நிமிடங்களுக்கு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.