உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டில் தேங்கும் கழிவுநீர்; வெளிபட்டணம் மக்கள் அவதி

ரோட்டில் தேங்கும் கழிவுநீர்; வெளிபட்டணம் மக்கள் அவதி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பாரதியார் தெரு, புது தெரு குப்பம், ஆகிய இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பால் ரோட்டில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றத்தினால் மக்கள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரத்தில் பாதாளசாக்கடை சரிவர பராமரிக்கப்படாமல் ரோடு, தெருக்களில் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. தற்போது வெளிப்பட்டணம் பாரதியார் தெரு, புதுத்தெரு, பாதாள சாக்கடை அடைப்பால் அந்த தெருவில் உள்ள சில வீடுகளில் கழிவு நீர் வெளியே செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கழிவறையில் தண்ணீர் சரியாக செல்லாமல் மேலே தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் பாதாள சாக்கடை பிரச்னையை சரிசெய்து வீட்டில் இருந்து கழிவு நீர் வெளியே செல்வதில் உள்ள இடர்பாடுகளையும் நீக்க வேண்டும். அதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை