உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோஜ்மா நகர் கடலில் மிதந்த எலும்புக்கூடுகள் கல்லறை தோட்டத்தில் கடலரிப்பு

ரோஜ்மா நகர் கடலில் மிதந்த எலும்புக்கூடுகள் கல்லறை தோட்டத்தில் கடலரிப்பு

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ஊராட்சி ரோஜ்மா நகரில் கடல் அரிப்பால் கரையோர கல்லறை தோட்டம் மண்ணரிப்பால் சேதமடைவதால் ரோஜ்மா நகர் கடலில் எலும்புக்கூடுகள் மிதந்தன.மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் மீனவ கிராமமாக ரோஜ்மா நகர் உள்ளது. இங்கு கடற்கரையோர கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் ஏராளமான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மன்னார் வளைகுடா கடற்கரையோரத்தில் இருந்து 50 மீ., தொலைவில் கல்லறை தோட்டம் உள்ளது.அப்பகுதியில் ஏராளமான தென்னை, பனை மரங்களும் கடற்கரையோரம் உள்ளன. கடந்த ஓராண்டாக பலத்த காற்றின் தாக்கத்தாலும் மண்ணரிப்பாலும் கடல் நீர் புகுந்துள்ளது. பனை மற்றும் தென்னை மரங்கள் மண்ணரிப்பால் கரையோரம் சாய்ந்துள்ளன.தொடர்ந்து வீசும் பேரலை தாக்கத்தால்கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டிருக்கும் எலும்பு கூடுகளை அலைகள் கரைக்கு இழுத்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். கடலாடி ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆத்தி, மீனவர் பேரின்பம் கூறியதாவது:ரோஜ்மா நகர் மன்னார் வளைகுடா கடலோரத்தில் நாளுக்கு நாள் பேரலை தாக்கத்தால் மண்ணரிப்பு வெகுவாக நிகழ்கிறது. இதனால் கடல் நீர் கிராமத்திற்குள் புகும் அபாயம் உள்ளது.நேற்று மாலை வீசிய பலத்த பேரலை தாக்கத்தால் கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடுகள் அலைகளின் தாக்கத்தால் கரை ஒதுங்குகின்றன.இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும்மனு அளித்துள்ளோம். பேரலை தாக்கத்திலிருந்து ரோஜ்மா நகரை காப்பாற்ற கடலோர தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.தற்போது கல்லறை தோட்டம் அருகே பேரலைகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து தடுப்புச் சுவர் அமைப்பதற்கான பணிகளை துவக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்