உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கழிப்பறை கழிவு நீரால் நாறுது ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட்

கழிப்பறை கழிவு நீரால் நாறுது ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பஸ்ஸ்டாண்ட் கட்டண கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளிப்பகுதியில் தேங்கி அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்போர் பயணிகள் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர்.நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக ஆர்.எஸ்.மங்கலம் உள்ளதால் வெளியூர் செல்வதற்கு இங்குள்ள பஸ் ஸ்டாண்ட்டிற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் பஸ் வசதி உள்ளதால் பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்டண கழிப்பறை பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கழிப்பறை வளாகத்தை சுற்றிலும் ரோட்டில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவு நீரால் ஏற்படும் துர்நாற்றத்தால் பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள், குடியிருப்போர் தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.சில மாதங்களாக நீடிக்கும் இப்பிரச்சனை குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் நிரந்தர தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை