உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.டி.ஓ., பேச்சு தோல்வி பாம்பனில் மீனவர் மறியல் உறுதி

ஆர்.டி.ஓ., பேச்சு தோல்வி பாம்பனில் மீனவர் மறியல் உறுதி

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நாளை (ஜூலை 5) திட்டமிட்டபடி பாம்பனில் சாலை மறியல் நடக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் 25 பேரை விடுவிக்க கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். ஜூலை 5ல் பாம்பனில் சாலை மறியல், மண்டபத்தில் ரயில் மறியல் போராட்டம் நடக்கும் என தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ராஜமனோகர் தலைமையில் மீனவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் போராட்டத்தை வாபஸ் பெற ஆர்.டி.ஓ., வலியுறுத்தினார்.இதற்கு மீனவர்கள் உடன்படாமல் ரயில் மறியலை வாபஸ் பெற்றனர். ஆனால் திட்டமிட்டபடி ஜூலை 5ல் பாம்பனில் சாலை மறியல் நடக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

கருப்புக் கொடி

நேற்று பாம்பனில் பெரும்பாலான நாட்டுப்படகில் மீனவர்கள் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை