மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
7 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
7 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
7 hour(s) ago
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் இளநீர் கடைகளில் விலை மிகவும் அதிகமாக ரூ.60 முதல் 70 ரூபாய்க்கு விற்பதால் மக்கள் கொளுத்தும் வெயிலில் கொதிப்படைகின்றனர்.பொதுவாக ராமநாதபுரத்தில் காய்கறிகள், பழங்கள் விலை மிக அதிகமாக விற்கப்படுகிறது. பெரும்பாலான காய்கறிகள், பழங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன. இதனால் வாடகை, ஏற்று, இறக்கு கூலி அதிகரிப்பால் விலை உயர்வு ஏற்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.இதே போல் கடந்த ஆண்டில் ரூ.40 முதல் 50க்கு விற்ற இளநீர் தற்போது ரூ.60 முதல் 70 வரை விற்கப்படுகிறது. உள்ளூர் இளநீர் கூட ரூ.60க்கு விற்பனையாகிறது. இதில் கொடுமை என்னவென்றால் பல இளநீரில் ஒரு மடக்கு தண்ணீர் கூட இருப்பது இல்லை.ராமநாதபுரத்தில் பெரும்பாலான கடைகளில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படுவதால் மக்கள் இளநீர் பருகும் ஆசையை விட்டு வருகின்றனர். இதுவே பக்கத்து மாவட்டங்களில் அதிகபட்சம் ரூ.50 விலைக்கு விற்கப்படுகிறது. இதுவே சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ரூ.25 முதல் 30 வரை தான் இன்னும் விலை உள்ளது.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வினைதீர்க்கும் வேலவர் கோயில் அருகே உள்ள இளநீர் கடையில் முன்பு ரூ.60க்கு விற்ற இளநீர் தற்போது ரூ.70க்கு விற்கப்படுகிறது. இதே போல் ஒரு சில இடங்களில் அதிக விலைக்கு இளநீர் விற்கப்படுகிறது. இந்த கடை வியாபாரியிடம் கேட்ட போது பொள்ளாச்சியில் இருந்து இளநீர் வருகிறது. விலை கட்டுப்படியாகவில்லை என்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago