மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
9 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
9 hour(s) ago
மண்டபம் : தங்கச்சிமடம் அருளகம் அறக்கட்டளை சார்பில், அப்துல்கலாம் நினைவிடம் அருகே பேரிடர் மீட்பு கட்டடத்தில் மணல் குன்றுகள் பாதுகாப்பு தினம் நடந்தது. தங்கச்சிமடம் ஊராட்சித்தலைவர் குயின்மேரி தலைமை வகித்தார். இதில் இயற்கை சீற்றங்களில் இருந்து ராமேஸ்வரம் தீவு மக்களை பாதுகாக்கும் இயற்கை அரணாகவும், ராமேஸ்வரத்தின் குடி நீர் ஆதாரமாகவும், கடல் ஆமை போன்ற உயிரினங்களில் வாழ்விடமாகவும் திகழ்கின்ற மணல் குன்றுகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அழிவின் விளிம்பில் உள்ள தீவு மணல் குன்றுகளை பாதுகாக்க குழுக்கள் அமைத்து பாதுகாப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதில் டாக்டர் இளையராஜா, தேசிய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி, வார்டு உறுப்பினர்கள் முருகேசன், சுகந்தி, சமூக ஆர்வலர்கள் சிகாமணி, கெவிக்குமார், சிக்கா, லெனின், ஜெபமாலை ஆகியோர் பங்கேற்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago