உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி மேலாண்மைக்குழு  புதிய தலைவர் தேர்வு 

பள்ளி மேலாண்மைக்குழு  புதிய தலைவர் தேர்வு 

ராமநாதபுரம், : திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு புதிய தலைவர் தேர்வு நடந்தது.பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பார்வையாளராக பங்கேற்றார். தலைமையாசிரியர் டாரத்தி கரோலின் வரவேற்றார். புதிய தலைவராக சரண்யா, உப தலைவராக ஞானவள்ளி தேர்வு செய்யப்பட்டனர்.பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஆசிரிய பயிற்றுநர் செந்தில்குமார், ஆசிரியர்கள் ஜெனிபர், சர்மிளா பேகம், பெற்றோர் பங்கேற்றனர்.* திருப்புல்லாணி ஒன்றியம் புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி தேர்வு நடந்தது.புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை மறு சீரமைப்பு கூட்டம் நடந்தது. தலைமையாசிரியர் செங்கோல் திரவியம் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகளை விளக்கினார். சிறப்பு பார்வையாளர்களாக திருப்புல்லாணி வட்டார கல்வி அலுவலர் உஷாராணி, ஆசிரியர் பயிற்றுநர் சந்திரசேகர் ஆகியோர் பேசினர்.பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களாக 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி மேலாண்மைகுழு தலைவியாக சுப்ரியா தேர்வு செய்யப்பட்டார். உதவி ஆசிரியை ஜார்ஜ் குயின் நன்றி கூறினார்.* திருவாடானை பகுதியில் 39 அரசு தொடக்கப்பள்ளிகளில் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு தேர்வு நடந்தது.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பள்ளிகளில் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில் பள்ளி மேலாண்மைக் குழுவில் முன்னாள் மாணவர்களையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. முதல் கட்டமாக ஆக.2ல் இரண்டாம் கட்டமாக ஆக.10 ல் நடந்தது.மூன்றாம் கட்டமாக திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 அரசு தொடக்கப்பள்ளிகளில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு தேர்வு நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் புல்லாணி, வசந்தபாரதி பார்வையிட்டனர்.உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஆக.24 ல் நடுநிலைப்பள்ளிகளில் ஆக.31க்குள் தேர்வு பணிகள் முழுமையடையும் என கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ