உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மகாராஷ்டிரா பக்தர்கள் வழங்கிய தையல் மிஷின்

மகாராஷ்டிரா பக்தர்கள் வழங்கிய தையல் மிஷின்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ராமாயண சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்ற மகாராஷ்டிரா பக்தர்கள் ஏழை பெண்கள் இருவருக்கு தையல் மிஷின் நன்கொடையாக வழங்கினர்.ராமேஸ்வரத்தில் தனியார் மஹாலில் மகாராஷ்டிரா சேர்ந்த லாடுபாய் நாராயினி பாரத வருஷ அறக்கட்டளை சார்பில் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சி 5 நாட்கள் நடக்கிறது. இதில் மகாராஷ்டிரா, உ.பி.,யை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த பக்தர்கள் ஏழை பெண்களுக்கு தையல் மிஷின் வழங்க முடிவு செய்து ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரு பெண்களுக்கு நேற்று தையல் மிஷின்கள் நன்கொடையாக வழங்கினர். மாவட்ட பா.ஜ., பார்வையாளர் முரளிதரன், மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் மாரி, ராமேஸ்வரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முருகன், எம்.முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி