மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
4 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
4 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
4 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
4 hour(s) ago
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் குறைந்த மதிப்புள்ள பத்திரங்கள், கோர்ட்பீஸ் ஸ்டாம்ப் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு வெளியிடும் முத்திரைத்தாள் எனப்படும் பத்திரம் கருவூலங்களில் இருந்து பெறப்பட்டு உரிமம் பெற்றவர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் குறைந்த மதிப்புள்ள 10, 20, 50 ரூபாய் பத்திரங்கள் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.கடந்த சில நாட்களாக இந்த பத்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே போல் திருவாடானையில் குற்றவியல் மற்றும் சிவில் கோர்ட் உள்ளது. கோர்ட் மற்றும் வக்கீல்கள் பயன்பாட்டிற்கு தீர்ப்புரை நகல், ஆவண விபரங்கள் உட்பட பல வகையான பயன்பாட்டிற்கு ரூ.5 முதல் 20 வரையிலான கோர்ட் பீஸ் ஸ்டாம்புகளை பயன்படுத்துகின்றனர். சில மாதங்களாக இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் கோர்ட்பீஸ் ஸ்டாம்பை தவிர மற்ற ஸ்டாம்புகள் சார்நிலை கருவூல அலுவலகத்தில் இருப்பு இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வக்கீல்கள் கூறியதாவது:வழக்குகளின் வக்காலத்து மனுவில் 10, 20 ரூபாய் மதிப்புள்ள கோர்ட் பீஸ் ஸ்டாம்புகள் அதிகம் ஒட்டப்படுகின்றன. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அளிக்கும் விண்ணப்பங்களிலும் இந்த ஸ்டாம்புகள் ஒட்டுவது கட்டாயம். சில மாதங்களாக தட்டுப்பாடு உள்ளது. தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago