உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எஸ்.ஐ., தேர்வு இலவச பயிற்சி

எஸ்.ஐ., தேர்வு இலவச பயிற்சி

மதுரை: சென்னையில் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சியில் சேர தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம்.சென்னை ஆர்வம் ஐ.ஏ.எஸ்., அகாடமி, பால்சாமி ராஜம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் நடக்கும் இப்பயிற்சியில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் சேரலாம். அவர்களுக்கு சென்னையில் தங்குமிடம், உணவு, பயிற்சி இலவசம். 4 மாதம் நடக்கும் இப்பயிற்சி மே 11ல் துவங்குகிறது.பாடக்குறிப்பேடு வழங்குவதுடன், தொடர் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். 10, பிளஸ் 2 வகுப்பு, பட்டப்படிப்பு முடித்தவர்கள் மதிப்பெண், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பம் உள்ளவர்கள், எண்- 2165, எல்.பிளாக், 12வது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை என்ற முகவரியில் நேரடியாகவோ, gmail.comஎன்ற இ மெயில் மூலமாகவோ மே 8 க்குள் விண்ணப்பிக்கலாம் என நிறுவனர் சிபிகுமரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை