உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் உள்ள வட மாநில தொழிலாளரை கணக்கெடுங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கீழக்கரையில் உள்ள வட மாநில தொழிலாளரை கணக்கெடுங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கீழக்கரை: கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1 முதல் 21 வார்டுகள் உள்ளன. 65 ஆயிரத்திற்கு மேல் மக்கள் வசிக்கின்றனர்.கீழக்கரை நகருக்குள் கட்டுமான தொழிலுக்காகவும், ஓட்டல், சூப்பர் மார்க்கெட், வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகளில் வட மாநில இளைஞர்கள் கீழக்கரையில் பணிபுரிந்து வருகின்றனர்.பீகார், உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் கீழக்கரை நகரில் பணிபுரிகின்றனர்.இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்புகளை நடத்த வேண்டும். இதன் மூலம் நகரில் நடக்கும் குற்றச்செயல்களை அடையாளம் காண இயலும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கீழக்கரையை சேர்ந்த மக்கள் டீம் காதர் கூறியதாவது: கீழக்கரை நகரில் பல வட மாநில தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். கடந்த 2018ல் அப்போதைய எஸ்.பி., யின் அறிவுறுத்தலின்படி கீழக்கரையில் போலீசார் வட மாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு பட்டியலை நடத்தினர். இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய ஆதார் மற்றும் சுயவிபரக் குறிப்புகளை வழங்கி பணி செய்தனர். தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வட மாநில தொழிலாளர்கள் பணி செய்யும் விபரம் குறித்த கணக்கீடு செய்ய வேண்டும். இதன் மூலமாக கீழக்கரை நகரில் நடக்கும் குற்றச் செயல்களை கண்டறிவதற்கு வசதியாக இருக்கும். எனவே எஸ்.பி., சந்தீஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை