உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மண் மாதிரி சேகரிப்பு முகாம்

மண் மாதிரி சேகரிப்பு முகாம்

கமுதி: கமுதி சேது சீமை அலுவலகத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை, சேது சீமை இயற்கை விவசாய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடந்தது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட மேலாளர் ஸ்ரீ கிருபா முன்னிலை வகித்தார்.இதில் கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள விவசாயிகளிடம் மண் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. பின் விவசாயிகளிடம் மண் மற்றும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. உடன் இயக்குனர்கள் செந்தில்வேல், பாஸ்கரன், தீபக், காந்தி, முத்துராமன் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ