உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தென்மண்டல அளவில் கிரிக்கெட் போட்டி

தென்மண்டல அளவில் கிரிக்கெட் போட்டி

கமுதி : -கமுதி கோட்டைமேடு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவுக் கல்லுாரி மைதானத்தில் கோட்டைமேடு நண்பர்கள் சார்பில் தென் மண்டல அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், துாத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டனர். லீக் சுற்று போட்டிகளாக நடந்தது. முடிவில் அருப்புக்கோட்டை அன்னை ஹோம் அணி முதல் பரிசு ரூ.50 ஆயிரம், மதுரை வின்ஸ்டார் அணி இரண்டாம் பரிசு ரூ.30 ஆயிரம், கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் சங்கம் மூன்றாம் பரிசு ரூ. 20 ஆயிரம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் சங்கம் ஒருங்கிணைப்பாளர், நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை