உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை தீவிரம்

குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை தீவிரம்

திருவாடானை : குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதால் வழக்குப்பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் குழந்தை திருமணங்களால் ஏற்படும் உடல்நிலை பிரச்னைகள் குறித்து அவர்களின் வாழ்க்கை பாழாகிறது. அரசு பல்வேறு விழிப்புணர்களை ஏற்படுத்தியும் கிராமங்களில் இத்திருமணங்கள் அதிகரித்துள்ளது. திருவாடானை பகுதியில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடக்கிறது. திருவாடானை அருகே சில நாட்களுக்கு முன் ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் 24 வயது வாலிபருக்கும் திருமணம் நடந்தது. சிறுமி சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சென்ற போது கர்ப்பமானது தெரிந்தது. சிறுமி புகாரில் திருவாடானை மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.குழந்தை திருமணங்களை தடுக்க புகார் தெரிவிப்பதற்கான இலவச எண் குறித்து விழிப்புணர்வு இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் திருமணத்திற்கு விருப்பம் தெரிவிப்பதால் புகார் பதிவு செய்யப்படவில்லை. குழந்தைபேறுக்கு மருத்துவமனைக்கு செல்லும் போது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.சமூக நலத்துறை அலுவலர்கள் கூறுகையில், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறிதும் யோசிக்காமல் சிறு வயதில் திருமணம் செய்து வைக்கின்றனர். பெற்றோரே விரும்பி திருமணம் செய்து வைப்பதை கட்டுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி குழந்தை திருமணம் செய்வோர் மீது கட்டாயம் வழக்குப் பதிவு செய்யப்படும். கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி