உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  காலமுறை ஊதியம் கோரி போராட்டம் 

 காலமுறை ஊதியம் கோரி போராட்டம் 

ராமநாதபுரம்: ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் துாய்மைக் காவலர், ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கக் கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை வகித்தார். உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அய்யாத்துரை வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்டத்தலைவர் சந்தானம், மாவட்ட துணைத்தலைவர் குருவேல், ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். குறைந்தபட்ச கூலி சட்டத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்களுக்கு 14,593 ரூபாய், துாய்மை பணியாளர்களுக்கு 12,593 ரூபாய் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். துாய்மை பணியாளர்கள், ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வுழங்க வேண்டும்.ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு கருணைத்தொகை ரூ.50 ஆயிரம், மாத ஓய்வூதியம் ரூ.2000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை