உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாநில டேக்வாண்டோ போட்டியில்  தங்கம் வென்று மாணவர்கள் சாதனை

மாநில டேக்வாண்டோ போட்டியில்  தங்கம் வென்று மாணவர்கள் சாதனை

ராமநாதபுரம் : மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று ராமநாதபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். தமிழ்நாடு அளவிலான டேக்வாண்டோ மாநில விளையாட்டுப் போட்டி மதுரை டி.வி.எஸ்., லட்சுமி பள்ளியில் நடந்தது. மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி, கோவை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் தலா மூன்று தங்கம், சில்வர், வெண்கலப் பதக்கங்களை வென்றனர். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த நேஷனல் அகாடமி பள்ளி மாணவர்களை கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் கலோன் பாராட்டினார்.மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி கலெக்டர் (பயிற்சி) மொகத் இர்பன், முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) நாகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ், நேஷனல் அகாடமி பள்ளியின் தாளாளர் டாக்டர் செய்யதா, ஐ.சி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி, டேக்வாண்டோ போட்டியின் பயிற்சியாளர்கள் கர்ணன், முனியசாமி, உடற்கல்வி ஆசிரியர் ஜோஸ்வா, ஆசிரியர் மாரியப்பன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ